கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்துள்ள அல்லு அர்ஜுன்.! அதுவும் எந்த படத்தில் தெரியுமா..?
சினிமா துறையில் இப்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பல நடிகர்கள் ஆரம்ப காலகட்டத்தில் கமல், ரஜினி ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு சில நடிகர்களின் விவரங்கள் தெரிந்தாலும் சில நடிகர்களை பற்றி தெரியாது என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு சில நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்களா என்கிற அளவிற்கு தெரியாமல் சிறிய சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்கள். அந்த வகையில், அல்லு அர்ஜுன் நடிகர் கமல்ஹாசனின் ஒரு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள செய்தி தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அது எந்த திரைப்படம் என்றால் மறைந்த இயக்குனர் கே. விஸ்வநாத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1986-ஆம் ஆண்டில் வெளியான “சிப்பிக்குள் முத்து” திரைப்படத்தில் தான். கமல்ஹாசனுக்கு பேரனாக அல்லு அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.
அவர் நடித்துள்ள அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும், நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 திரைப்படத்திலும். கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.