நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது, உஸ்மானியா பல்கலைகழக கமிட்டி உறுப்பினர்கள் நடத்திய தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

AlluArjun hydrabad

தெலங்காணா: ‘புஷ்பா 2′ திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டார். ஆனால், ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் இருந்து மறுநாள் காலையிலேயே விடுதலை அடைந்து வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில், ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, நேற்றைய தினம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் காட்டமாக பேசினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றதே, ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், திரை பிரபலங்கள் மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்க கூடாது என கேட்டுக் கொள்வதாகவும், தான் முதல்வராக இருக்கும் வரை, இனி மாநில சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளார்.  இதனையடுத்து, தெலங்கானா முதல்வரின் கருத்துக்கள் தன்னை காயப்படுத்தியதாக அல்லு அர்ஜுன் வருந்தியுள்ளார்.

ரோடு ஷோ நடத்தியதாக கூறுவது சரியல்ல எனவும், அனுமதியின்றி சென்றதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அரசுடன் எந்த சர்ச்சையையும் விரும்புவதாகவும் கூறியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, ஹைதரபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது, உஸ்மானியா பல்கலைகழக கமிட்டி உறுப்பினர்கள் நடத்திய தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

‘புஷ்பா 2’ சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பலியான ரேவதிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டுமென தக்காளி, கல் மற்றும் பூந்தொட்டிகளை வீசி, ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக்கோரியும் போராட்டம் நடத்தினர்.

அல்லு அர்ஜுன் வேண்டுகோள்

இந்த நிலையில், தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் அல்லு அர்ஜுன் பதிவு ஒன்றை வெளிட்டுள்ளார். இது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் தனது சமூக வலைதள பக்கத்தில், “சமூக ஊடகங்களிலும், பொதுவெளியிலும் உங்களுடைய உணர்வுகளை பொறுப்புடன் வெளிப்படுத்துங்கள்.

தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். போலியான ஐடிக்கள் மூலம் எனது ரசிகர் என சித்தரித்து, தவறான பதிவுகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரசிகர்கள் இதுபோன்ற பதிவுகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்