தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சின்னத்திரை படப்பிடிப்பு 60 பேரை வைத்து நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, ஊரடங்கு உத்தரவால், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு சமீபத்தில், சின்னத்திரை படப்பிடிப்பை 20 பேரை வைத்து நடத்தலாம் என அறிவித்திருந்த நிலையில், இதற்கு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் 20 பேரை மட்டும் மட்டும் படப்பிடிப்பு நடத்துவது சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பெப்சி தலைவர் செல்வமணி 40 பேரை வைத்து சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சின்னத்திரை படப்பிடிப்பு 60 பேரை வைத்து நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து படப்பிடிப்பு பணிகள் முழுவேகத்துடன் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…