நடிகர் பாபி சிம்ஹா கடந்த ஆண்டிலிருந்து கொடைக்கானலில் இருக்கும் பேத்துப்பாறை பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். வீடு கட்டும் பணிகள் மற்றும் அதற்கான தொகையையும், கொடைக்கானலை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஜமீர், காசிம் முகமது ஆகியோர்களிடம் பாபி சிம்ஹா கொடுத்துள்ளார்.
அதன்பிறகு வீட்டை குறைவான தொகையில் கட்டி வைத்து இருந்தது பாபி சிம்ஹாவுக்கு தெரிய வந்து ஒப்பந்ததாரர்க ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்திற்கு மேல் பெரிதாக ஆன காரணத்தால் ஒப்பந்ததாரர்கள் வீட்டை கட்டாமல் பாதியிலேயே சென்று இருக்கிறார்கள்.
2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ..!
பிறகு இது குறித்து பாபி சிம்ஹா கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்பந்ததாரர்கள் தன்னிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் இவர்களுக்கு ஆதரவாக இருந்த உசேன், மகேந்திரன் ஆகியோர் மீது புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதன் பின் காவல்துறையினர் வழக்குப்பதிவும் செய்தனர்.
அதனை தொடர்ந்து உசேன் பேட்டி ஒன்றில் பேசும்போது பாபி சிம்ஹா என் மீது பொய்யான புகார் அளித்து இருக்கிறார் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கொடைக்கானல் விவகாரத்தில் தன்னை பற்றி பாபி சிம்ஹா தன்னை பற்றி அவதூறு தெரிவித்ததாகவும், தன்னை மிரட்டியதாகவும், காங்கிரஸ் முன்னாள் எம்பி ஆரூணின் சகோதரர் மகன் உசேன் ரூ.1 கோடி கேட்டு வழக்கு மானநஷ்ட வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்.
இதனையடுத்து, இந்த வழக்கில் நடிகர் பாபி சிம்ஹா பதில் அளித்து ஆகவேண்டும் என அவருக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு தள்ளி வைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…