வரும் 23-ம் தேதி அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்ய வேண்டும்! நடிகர் விஷால் கோரிக்கை!
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதையடுத்து, வரும் 23-ம் தேதி அனைத்து படப்பிடிப்புகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கோரிக்கையின்படி, அனைத்து நடிகர்களும் வாக்களிக்க வசதியாக படப்பிடிப்புகளை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.