எல்லா புகழும் ஆண்டவனுக்கே… தன்னுடைய புது காருடன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட பூவையார்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாடகர் பூவையார் என்கிற கப்பீஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த வரவேற்பின் மூலம் பூவையாரின் வாழ்க்கை அப்படியே மாறியது என்றே கூறலாம்.
இவர் சில பாடல்களையும் பாடியுள்ளார். ஆம், தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாடியதுடன் சேர்ந்து சிறிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்தார். அதன்பிறகு மாஸ்டர் படத்திலும் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பூவையார் தற்போது மேடை நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என பிஸியாகி விட்டார். தற்போது சில படங்களில் நடித்தும் சில ஆல்பம் பாடல்களிலும் பாடி நடித்து வருகிறார். இதற்கிடையில், தான் புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ” மக்களே எங்களோட புதிய கார் நீங்கள் இல்லயே நான் இல்லை உங்களுடைய ஆசீர்வாதம் எனக்கு எப்போமே இருக்கணும் நன்றி.. எல்லா புகழும் ஆண்டவனுக்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.