கேப்டன் விஜயகாந்த் மறைவு! நாளை படப்பிடிப்புகள் ரத்து!

RIP vijayakanth

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நேரில் சென்றும் சமூக வலைத்தளங்களின் மூலமும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

விஜயகாந்தின் மறைவுச் செய்தி அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தினார். அதைப்போல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் விக்ரம், கமல்ஹாசன், அருண் விஜய், இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் ரேகா, குஷ்பு, நமீதா உள்ளிட்ட பிரபலங்களும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இரங்கல்! 

இந்த நிலையில், விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நாளை (டிசம்பர் 29) ஆம் தேதி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி, விஜயகாந்தின் இறுதி பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, நாளை தமிழகத்தில் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது.  மேலும், விஜயகாந்தின் இறுதிச்சடங்கு நாளை முழு அரசு மரியாதை உடன் நடைபெறுகிறது. விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்க தமிழக அரசு உத்தரவு கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)
Red Alert - Heavy Rains
Tamilnadu Speaker Appavu