சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற ஆலியா பட் கீர்த்தி சனோன்! எந்த படங்களுக்காக தெரியுமா?
ஆண்டுதோறும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இந்திய அரசு சார்பில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2021-ஆம் ஆண்டிற்கான விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. MIMI மற்றும் கங்குபாய் கத்வாடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறுகின்றனர் ஆலியா பட் மற்றும் கீர்த்தி சனோன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படத்திற்கான விருதை ராக்கெட்ரி திரைப்படம் வென்றுள்ளது.புஷ்பா திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று சிறந்த பாடல்கள் பிரிவில், புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாதுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.