பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு காய்ச்சல் காரணமாக ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியீட்டுள்ள குஷ்பு அதில் “நான் கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் இருக்கிறேன். அது என்னைப் பாதித்துவிட்டது. அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றைக் கொன்றது.
உடலில் ஏற்படும் அறிகுறிகளைச் சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள், அதனைப் புறந்தள்ளி விடாதீர்கள். நான் கவனிக்காமல் விட்டதால் மட்டும் தான் எனக்கு இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது . விரைவில் குணமடைவேன் என நம்புகிறேன். பாதுகாப்பாக இருங்கள்” என டிவிட் செய்துள்ளார்.
குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட தகவலை அறிந்த ரசிகர்கள் தயவுசெய்து கவனித்து, விரைவில் குணமடையுங்கள் எனவும், விரைவில் குணமடையுங்கள் நீங்கள் வலிமையான பெண்” எனவும் கூறி வருகிறார்கள்.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…