முனி படங்களின் பாகங்களான உருவான காஞ்சனா 1 மற்றும் 2ஆம் பாகங்கள் தமிழில் நல்ல வசூலை கொடுத்தன. அப்படத்தை இயக்கி நடித்த ராகாவா லாரன்ஸிற்கும் நல்ல பெயரை கொடுத்தது. படத்தில் இவரது காமெடி கலந்த கலாட்டாவான நடிப்பிலும் பல ரசிகர்களை தன்வசப்படுத்தினார் லாரன்ஸ்.
தற்போது காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை லாரன்ஸ் இயக்கி நடித்து வருகிறார். வேதிகா, ஓவியா ஆகியோர் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்த படத்தை ஏப்ரலில் வெளியிட படக்குழு உறுதி செய்து உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து, ராகவா லாரன்ஸ் ஒரு பாலிவுட் படத்தை இயக்க உள்ளார் என்றும், இந்த படத்தில் அக்ஷ்ய் குமார் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படமும் திகில் கலந்த காமெடி படமாக காஞ்சனா படம் போல உருவாக உள்ளதாகவும், அநேகமாக அந்த படம் காஞ்சனா படத்தின் ரிமேக் எனவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.
DINASUVADU
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…