AK62-படத்தில் விஜய் சேதுபதி வில்லனா.? அவரே கூறிய தகவல்.!

Default Image

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

AK-61 படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த 28-ம் தேதி வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில், ஊடகத்திற்கு பேட்டியளித்த விஜய் சேதுபதியிடம் AK62-படத்தில் நீங்கள் வில்லனாக என கேட்கப்பட்டுள்ளது ” அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி.. இல்லை நான் விக்னேஷ் சிவனிடம் கேட்டேன் என்னடா அப்படி ஏதும் வச்சிருக்கியா-னு.. அதுக்கு விக்னேஷ் சிவன் இல்லை அப்படியெல்லாம் வைக்கவில்லை. என் ஹீரோவை எப்படி அப்படி வில்லனாக வைப்பேன் என சொன்னார் ” என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay