அடி தூள்…! அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த “AK61” பர்ஸ்ட் லுக் வெளியீடு.!
அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த “AK61” திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் இன்று வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக அப்டேட் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு துணிவு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மிரட்டலான லுக்கில் அஜித் இருப்பதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகளும் அதிகமாகியுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- அடடா இது நம்ம குஷ்பூவா..? புகைப்படங்களை பார்த்து இன்ப அதிர்ச்சியான ரசிகர்கள்.!
இந்த திரைப்படத்தை எச்.வினோத் இயக்க படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
வலிமை படத்திற்கு பிறகு எச்.வினோத் -அஜித் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#Thunivu #NoGutsNoGlory#AK61FirstLook #AK61 #Ajithkumar #HVinoth
@ZeeStudios_ @BayViewProjOffl @SureshChandraa #NiravShah @GhibranOfficial #Milan @SupremeSundar_ @editorvijay #Kalyan #AnuVardhan @premkumaractor #MSenthil @SuthanVFX #CSethu #SameerPandit @anandkumarstill pic.twitter.com/Mb7o0fuGTT— Boney Kapoor (@BoneyKapoor) September 21, 2022