AK-61 வினோத்.! AK-62 சுதா கொங்கரா.! அஜித்தின் மாஸ்டர் பிளான்.!?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அஜித்தின் 61வது திரைப்படத்தை வினோத் இயக்குவது ஏறக்குறைய உறுதியான நிலையில், அஜித்தின் 62வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இது இவரது 60வது திரைப்படமாகும். H.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை அடுத்து 61வது திரைப்படத்தையும் வினோத் தான் இயக்குகிறாராம். போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் அறிவிப்பு வலிமை பட ரிலீஸ் சமயத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் இந்த 61வது திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் அறிவிப்பே இன்னும் வெளியாகாத சூழ்நிலையில், அஜித்தின் 62வது திரைப்படம் குறித்த தகவல் வெளியாகிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தை சுதா கொங்கரா இயக்க அதிக வாய்ப்புள்ளதாம். அஜித்திடம் அவர் கதை கூறி ஓகே வாங்கி வைத்துவிட்டாராம். அந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளாராம்.
முதலில் அஜித்தின் 61வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகட்டும், அதன் பிறகு என்ன நடக்கிறது என பார்க்கலாம்.