AJITH KUMAR [file image]
நடிகர் அஜித் குமார் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அஜித்குமார் மற்றும் நடிகை த்ரிஷா ஆகிய இருவரும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜான் புறப்பட்டனர்.
இவரது அடுத்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த படம் குறித்த கூடுதல் தகவல் என்னவென்றால், பிறபல முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் ‘ஏகே 63’ படத்தை தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, மைத்ரி மூவி மேக்கர்ஸ், தெலுங்கில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ போன்ற பெரிய படங்களை வழங்கியுள்ளது. ஒரு வேலை இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஹிட் பட இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் அஜித்?
இந்த நிலையில், இந்த படம் குறித்த சுவாரிஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த திரைப்படம் முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அஜித்தின் முந்தைய காமெடி படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும், படத்தில் அஜித் காமெடி செய்திருக்க மாட்டார். அவருடன் நடிக்கும் சக நடிகர்கள் காமெடி செய்திருப்பார்கள்.
இப்படி இருக்கையில், ஏகே 63 திரைப்படம் முழுக்க காமெடி படம் என்றால், அது எவ்வாறு சாத்தியம் என்று தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் கடந்த காலங்களை கடந்து இப்பொது அஜித் ஆக்ஷன் படங்களில் மிரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் இருக்க, ஆதிக் ரவிச்சந்திரன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த பிறகு அஜித்துடன் நெருக்கமாக இருந்து வாருகிறார். இதனால், அஜித்துக்கு ஏற்றவாரு ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…