அஜித் – விஜய் படங்கள் மீண்டும் மோதல் !!
புதுப்படங்கள் வெளியீடு நிறுத்தப்பட்டு இருப்பதால், மீண்டும் ‘மெர்சல்’, ‘வேதாளம்’ போன்ற படங்களை திரையிட திரையரங்கு அதிபர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்கள் சங்கம் புதிதாக எந்தவொரு படமுமே வெளியீடு இல்லை என்று அறிவித்திருக்கிறது. ஒவ்வொரு படத்தின் திரையிடலுக்கும் செலுத்தி வரும் க்யூப் மற்றும் யுஎஃப்ஓ நிறுவனத்திற்கான கட்டணத்தை இனி செலுத்தப் போவதில்லை.
தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுடைய சொந்த சர்வர்களை நிறுவிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் புதிய படங்கள் எதுவுமே வெளியீடு இல்லாததால், பழைய படங்களான ‘மெர்சல்’, ‘வேதாளம்’, ‘அவள்’, ‘மீசைய முறுக்கு’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட பல படங்கள் மறுவெளியீடாக திரையிடப்பட்டு இருக்கிறது.
விரைவில் க்யூப் நிறுவனங்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையேயான பிரச்சினைக்கு சுமுக தீர்வு எட்டப்பட வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சினையால் நாங்கள் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஹைதராபாத்தில் தயாரிப்பாளர்கள் – க்யூப் நிறுவனங்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் சுமுக முடிவு எட்டப்படும் என தெரிகிறது
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு