அஜித்தை பல கெட்டப்ல பாத்திருப்பிங்க…! ஆனா இந்த கெட்டப்ல பாத்திருப்பீங்களா….!!!
அஜித்தின் நடிப்பில் அடுத்தாக திரைக்கு வர இருக்கும் படம் விசுவாசம். நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் அஜித் இணைந்துள்ள படம். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் சினிமாக்களில் பல படங்கள் ஆரம்பிக்கப்பட்டு பிறகு நிறுத்தி கொள்ளப்பட்டன. அவ்வாறான ஒரு படம் தான் திருடா. ஜனா படத்திற்கு முன்னதாக அஜித் நடிக்கவிருந்த படம்.
ஜனா படத்தை இயக்கியவர் தான் இந்த படத்தையும் இயக்க இருந்தார். ஆனால் இது ஜனாவை போன்ற கதை கிடையாது. இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருந்தார்.
இதன் ஒரே ஒரு போஸ்டர் மட்டுமே வெளியாகியிருந்தது. அதில் அஜித் டாக்டர் கெட்டப்பில் உள்ளார்.