உலகின் மிகப்பெரிய திரையரங்கில் வெளியாகும் அஜித் ‘துணிவு’.?!
ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரவிருக்கும் நிலையில், அதனை முன்னிட்டு அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சுவாரியர், மோகன் சுந்திரம்,பகவதி பெருமாள்,சமுத்திரக்கனி,அஜய்,சி.எம் சுந்தர்,ஜான் கொக்கைன், வீரா, பிரேம், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இதையும் படியுங்களேன்- சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வால்.!
வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே படத்தினுடைய ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.
எனவே படத்திற்கு நல்ல ஓப்பனிங் வரும் என தெரிகிறது. இந்நிலையில், துணிவு திரைப்படம் உலகத்தில் உள்ள பெரிய திரையரங்கில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி, உலகின் மிகப்பெரிய தியேட்டரான பாரிஸில் உள்ள Grand Rex தியேட்டரில் துணிவு திரைப்படம் வெளியாகிறது. இந்த திரையரங்கு 2,700 இருக்கைகள் கொண்டது. இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது.