Ajith – Natarajan: இந்திய கிரிக்கெட் வீரரான நடராஜன், ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடிகர் அஜித்குமாருடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
சேலம் அருகே சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இடது கை வேகப்பந்து வீச்சாளராக தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். நடராஜன் தற்பொழுது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் இவர், நேற்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அவார்ட் பிறந்தநாளை மறக்க முடியாத தருணமாக மாற்றியிருக்கிறார் நடிகர் அஜித்.
ஆம், சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த அதே ஹோட்டலில் நடிகர் அஜித்தும் தங்கியிருக்கிறார். நேற்றைய தினம் நள்ளிரவில் நடராஜனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டடு விழாவை சிறப்பித்துள்ளார். நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட கேக் வெட்டிய நடராஜன், அஜித்திற்கு ஊட்டுவது போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அதிலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது, அதாவது கேக் வெட்டியதும் நடராஜன் அஜித்திற்கு ஊட்ட சென்றதும், “நோ எனக்கு வேணாம்…முதல்ல முரளி சார்க்கு கொடுங்க” என்று கூறினார். அதே போல் அவருக்கு கொடுத்ததும் இவர்கள் மாறிமாறி கேக்கை பரிமாறி கொண்டனர். நேற்றைய தினம் நடராஜனின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், இன்று இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…