எனக்கு வேணாம்…முரளி சார்க்கு கொடுங்க.! கொண்டாட்டத்தில் அஜித்தின் செயல்!

Ajithkumar - Natarajan

Ajith – Natarajan: இந்திய கிரிக்கெட் வீரரான நடராஜன், ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடிகர் அஜித்குமாருடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

சேலம் அருகே சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இடது கை வேகப்பந்து வீச்சாளராக தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். நடராஜன் தற்பொழுது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் இவர், நேற்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அவார்ட் பிறந்தநாளை மறக்க முடியாத தருணமாக மாற்றியிருக்கிறார் நடிகர் அஜித்.

ஆம், சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த அதே ஹோட்டலில் நடிகர் அஜித்தும் தங்கியிருக்கிறார். நேற்றைய தினம் நள்ளிரவில் நடராஜனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டடு விழாவை சிறப்பித்துள்ளார். நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட  கேக் வெட்டிய நடராஜன், அஜித்திற்கு ஊட்டுவது போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அதிலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது, அதாவது கேக் வெட்டியதும் நடராஜன் அஜித்திற்கு ஊட்ட சென்றதும், “நோ எனக்கு வேணாம்…முதல்ல முரளி சார்க்கு கொடுங்க” என்று கூறினார். அதே போல் அவருக்கு கொடுத்ததும் இவர்கள் மாறிமாறி கேக்கை பரிமாறி கொண்டனர். நேற்றைய தினம் நடராஜனின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், இன்று இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்