நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது.
படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருப்பதால் விடாமுயற்சி படப்பிடிப்பு எப்போதுதான் தொடங்கும் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் சோகத்துடன் இருக்கிறார்கள்.
இதற்கிடையில், அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். அவர் ஏர்போர்ட் செல்லும் புகைப்படம், மனைவியுடன் வெளிநாட்டில் ஊர் சுற்றும் புகைப்படம், பைக் ரைட் செல்லும் புகைப்படம் என இவ்வாறு ரசிகர்களை ஒரு பக்கம் ஆறுதல் படுத்திவந்தது.
இந்த நிலையில், தற்பொழுது ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படத்தில், அரசியவாதிகள் இருவருக்கும் நடுவே அஜித் கெத்தாக கூலிங் கிளாஸ் உடன் மாஸாக நிற்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அஜித் அரசியலுக்கு வருகிறாரா? என்று புரளியை கிளப்பி வருகின்றனர்.
அவர், அரசியலுக்கும் வரவே வேண்டாம் விடாமுயற்சி திரைப்பட ஷூட்டிங்கை தொடங்க வேண்டும் என ரசிகர்கள் குமுறி வருகிறார்கள். ஒருவேளை அந்த புகைப்படத்தை வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையுடன் நிற்கும் இருவரும் அஜித்தின் ரசிகர்களாக கூட இருக்கலாம். எது என்னவென்று தெளிவாக தெரியாமல், வதந்தியை பரப்பிவிட வேண்டாம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அஜித்தின் மேலாளர் விரைவில் அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…