அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ பட செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!

Good Bad Ugly

குட் பேட் அக்லி : நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘குட், பேட், அக்லி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து தற்பொழுது, அடுத்த அப்டேட் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா அறிவித்திருந்தார்.

அதன்படி, தற்பொழுது இந்த இரண்டாம் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் ‘காட் பிளஸ் யூ மாமே’ எனும் வசனம் எழுதப்பட்டதுடன், அஜித்தின் வெறித்தனமான லுக் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இத்திரைப்படம் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என்று குறிக்கும் வகையில், ஒரு போஸ்டர் மே 19ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்த இரண்டவது அப்டேட் இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரில் நவீன் மைத்ரி இப்படத்தை தயாரிக்கிறது. மேலும், இதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்