“GBU தாறுமாறு ஹிட்.,” குட் பேட் அக்லி-ஐ கொண்டாடி தீர்க்கும் அஜித் ஃபேன்ஸ்! நெட்டிசன்கள் கூறுவதென்ன?
அஜித் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் அளவுக்கு பக்கா கமர்சியல் படமாக இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ், எஸ்.ஜே.சூர்யா என பலர் நடித்துள்ளனர்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு மங்காத்தா பாணியில் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு ஃபேன் பாய் திரைப்படமாக இயக்குனர் ஆதிக் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். படத்தின் டீசர், ட்ரைலருமே பழைய வின்டேஜ் அஜித்தை வெளிக்கொணர்ந்தது போல அமைந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் GBU திரைப்படம் திரையிடப்பட்டது. மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் காலை 4 மணி முதலே காட்சிகள் ஆரம்பமாகிவிட்டது. இப்படியான சூழலில், படத்த்தை பார்த்த இணையவாசிகள், திரை விமர்சகர்கள் தங்கள் படத்தின் மீதான தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அஜித் ரசிகர்களை குறிவைத்து படத்தை ஆதிக் இயக்கியுள்ளதால், படத்தில் முந்தைய அஜித் படத்தின் ரெபரென்ஸ்கள் அதிகமாக உள்ளது என்றும், மார்க் ஆண்டனி, லியோ போல பழைய பாடல்களை ரீ கிரியேட் செய்து இப்படத்திலும் இயக்குனர் அதிகமாக பயன்படுத்தியுள்ளார் என்றும், படத்தில் பெரியதாக கதை எதுவும் இல்லை. வழக்கம் போல ஹீரோவை எதிர்க்கும் வில்லன். தான் பெரிய ஆள் என்பதை தவிர்த்து ஒதுங்கி வாழும் ஹீரோ, பிறகு மீண்டும் தனது பழைய நிலைக்கு வந்து வில்லனை காலி செய்யும் ஹீரோ என்ற டெம்பிளேட் உடன் படம் உள்ளது என்றும்,
படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜித்திற்கு பில்டப் ஏற்றும் வகையிலும், அதற்கேற்ற காது கிழியும் அளவுக்கு பின்னணி இசையும் இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தின் இடைவேளை காட்சியில் விஜய் ரெபரன்ஸ் காட்சியாக KEEP WAITING என அஜித் கூறுவது போல அமைந்தது பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
Take it 👌👌
Do it👍👍👍
Achieve it💥💥💥💥💥💥@Adhikravi Thanks for everything ❤️ Such a great Movie ❤️❤️❤️🙏
Enough as a fan 😉 #GoodBadUglyFDFS #GoodBadUgly pic.twitter.com/QIk8GqByKg— Mohan J (@MohanMohz) April 10, 2025
Movie review :
Thala Ajith is very different in this movie when compared to his recent movies ❤️
Music worked well but not totally btw 😀
The screenplay and direction was good 🙌
Overall a 6/10 good movie to watch in theatre 🔥☠️#GoodBadUgly #GoodBadUglyFDFS #AjithKumar pic.twitter.com/VEakR3zibE
— VENGEANCE (@Batmanx73) April 10, 2025
#GoodBadUgly – Crazy Interval Block😂🔥
The #AjithKumar we missed all these years is back🫡
1st half was pure Fans fest with Vintage elements 👏👏 pic.twitter.com/IUUOsApPY9— . 𝐀𝐭𝐡𝐢𝐝𝐡𝐢 ⚓ (@TrulyNaveen_) April 10, 2025
#GoodBadUgly [5/5] : INDUSTRY HIT! #AK Verithanama Sambhavam 🔥
— Ramesh Bala (@rameshlaus) April 10, 2025
GOOD – For Fans 💥
BAD – For Neutrals😐
UGLY – For Haters😭Strictly & Only for AK Fans!#GoodBadUgly
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 10, 2025