துணிவு மீது அதீத பாசம்… சிக்கலில் மாட்டிய அஜித் ரசிகர்.! எச்சரித்த சென்னை போலீஸ்..!
நடிகர் அஜித்திற்கு இருக்கும் ரசிகர்கள் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவர் படங்கள் வெளியானால் போதும் திரையரங்குகளே திருவிழா போலத்தான் இருக்கும். அவரது படங்கள் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் பலரும் அஜித் பேனரை தங்களுடைய வாகனங்களில் வைத்து கொண்டு படம் வெளியாகும் வரை ப்ரோமோஷன் செய்வார்கள்.
இந்நிலையில், “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனையடுத்து துணிவு படத்தின் பேனர் ஒன்றை அஜித்தின் தீவீர ரசிகர்கள் ஒருவர் தன்னுடைய ஆட்டோவின் பின்னால் நம்பர் பிளைட் மறைக்கும் விதத்தில் வைத்துள்ளர். இது எடிட் எனவும் பலர் கூறி வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- ஐயோ பாவம்… அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தேன்.. சீக்ரெட் கூறும் மாளவிகா.!
அதற்கான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், இதைப் பார்த்த சென்னை போக்குவரத்து போலீஸ் டிவிட்டரில் “இப்படி செய்வது தவறான விஷயம்.. இது எந்த நேரத்தில் எடுக்கப்பட்டது எந்த இடம் என்ற விவரத்தையும் கேட்டுள்ளனர்.
பிறகு,நெட்டிசன் ஒருவர் அந்த இடத்தையும் நேரத்திற்குமான தகவலை கொடுத்துள்ளார். அதற்கும் பதில் அளித்த சென்னை போக்குவரத்து போலீஸ் “குறித்து வைத்துக்கொண்டோம் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பப்படும்” என்று பதிவிட்டுள்ளனர்.
#ThunivuPongal ????❤️???? pic.twitter.com/j1AfvrWpAT
— Nelson Ji (@Nelson_Ji) November 29, 2022