இரண்டு படங்களுக்கு பிறகுதான் மற்ற படங்கள்! தல59 & தல60 அப்டேட்ஸ்!!
தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதியன்று விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த படத்தை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படம் பாலிவுட்டில் வெற்றி பெற்ற பிங்க பட ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நஸ்ரியா நசீம், ஆதிக் ரவிசந்திரன், வித்யா பாலன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஆக அஜித்தின் 59, 60 வது படங்களை இவர்தான் தயாரிக்க உள்ளார்.
DINASUVADU