தடுக்கி விழுந்தார்.! திரும்ப எழுந்தார்.! அதுதான் வலிமையான அஜித்.! மேக்கிங் வீடியோ எப்படி இருக்கிறது.?

Published by
மணிகண்டன்

அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தில் இருந்து மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த மேக்கிங் வீடியோ எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று வலிமை. அஜித்குமார் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தை H.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார்.

சதுரங்க வேட்டை, தீரன் படங்களை தொடர்ந்து வினோத்தின் கதைக்களத்தில் வரும் திரைப்படம் என்பதாலும், அஜித்திற்கு பிடித்தமான பைக் ரேஸிங் கதைக்களம் என்பதாலும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே 2 பாடல்கள், கிளிசம்பஸ் வீடியோ வெளியான நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது. அதில், பைக் சேசிங் காட்சிகள் எப்படி உரியுவாகினார்கள், கோவிட் ஊரடங்கு சமயத்தில் ஷூட்டிங் நடக்காமல் போனது, என எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டது.

கூடவே ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அஜித்தின் பைக் ஸ்டண்ட் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், முதல் டேக்கில் அஜித் பைக் ஸ்டண்ட் காட்சி செய்யும் போது தவறி விழுந்துவிடுவார். அந்த காட்சி கட் செய்யப்படாமல் இருக்கும் மீண்டும் அஜித்தை காண்பிக்கையில் திரும்ப எழுந்து நடந்து வருவார்.

பின்னர், மீண்டும் அந்த காட்சியை கட்சிதமாக செய்து முடிப்பார். இது அவரது திரை வாழ்வை கூட குறிக்கும் வகையில் காண்பிக்கப்பட்டுள்ளதாக இருக்கும். அவரின் திரை பயணத்தில் எத்தனை தோல்வி படங்கள் கொடுத்து கிழே விழுந்தாலும், மீண்டும் புது தெம்புடன் எழுந்து வருவார்.

வீரம், வேதாளம், விஸ்வாசம் என ஹிட் கொடுத்த அஜித்குமார் மீண்டும் தனக்கு மிகவும் பிடித்தமான ஸ்டைலில் மாஸ் ஹிட் கொடுக்க வலிமையில் கடுமையாக தன்னை தயார்படுத்தியுள்ளார் என்பது மேக்கிங் வீடியோவில் பளிச்சென தெரிகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் இல்லை!” புது கண்டிஷன் போட்ட இஸ்ரேல் பிரதமர்! 

“ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் இல்லை!” புது கண்டிஷன் போட்ட இஸ்ரேல் பிரதமர்!

டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…

14 minutes ago

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

13 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

14 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

14 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

15 hours ago

ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…

15 hours ago