ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசனுடன் மோதும் அஜித்! தலைக்கு தில்ல பாத்தீங்களா?

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படமும் கமல்ஹாசனின் தக் லைஃப் படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Vidaamuyarchi vs Thug Life

சென்னை : நடிகர் அஜித் தன்னுடைய படத்தை ஒரு தேதியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டால் அந்த தேதியில் எவ்வளவு பெரிய படங்கள் வந்தாலும், சொன்ன தேதியில் படத்தை வெளியீட்டுவிடுவார் என்றே கூறலாம். அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கடந்த 2019-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்திற்கு போட்டியாக விஸ்வாசம் படத்தை இறக்கினார்.

அந்த பந்தயத்தில், இரண்டு படங்களும் வெற்றியடைந்தது என்றே கூறலாம். அதற்கு அடுத்ததாக விஜயின், வாரிசு படத்துடன் துணிவு படத்தையும் அஜித் வெளியிட்டார். இந்நிலையில், யாருடைய படங்கள் வந்தாலும் தன்னுடைய படத்தை தைரியமாக வெளியிடும் அஜித் விஜய், ரஜினி ஆகியோரை தொடர்ந்து கமல்ஹாசனுடனும் தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, அஜித்குமார் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி படத்தினை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக படத்தினை தீபாவளிக்கு கொண்டுவருவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்த நிலையில், இப்போது படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட்டால் சரியாக இருக்கும் என படக்குழு யோசித்துள்ளதாம்.

பொங்கல் பண்டிகைக்கு தான் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வரும் தக்லைஃப் படத்தையும் வெளியீட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தக்லைஃப் மற்றும் விடாமுயற்சி ஆகிய படங்கள் ஒரே தேதியில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.

விரைவில் இரண்டு படங்களுக்கான ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், ஏற்கனவே, அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது. இருப்பினும், விடாமுயற்சி படமும் அதே தினத்தில் வெளியாகவுள்ளதாக பரவும் தகவல் ஒரு பக்கம் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வேலை பொங்கல் பண்டிக்கைக்கு விடாமுயற்சி படத்தினை வெளியிட்டு அதற்கு அடுத்ததாக மே மாதம் குட் பேட் அக்லி படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. உண்மை என்ன குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க படங்களை பற்றிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டும் தான் தெரிய வரும்…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்