தனி ஒருவன் 2 போனா போகுது! தேடி வந்த அஜித் பட வாய்ப்பு..கொண்டாட்டத்தில் மோகன் ராஜா!

ajithkumar Mohan Raja

மோகன் ராஜா : அஜித்தின் 64-வது திரைப்படத்தினை இயக்குனர் மோகன் ராஜா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மோகன் ராஜா தனி ஒருவன் இரண்டாவது பாகத்தினை ஜெயம்ரவியை வைத்து எப்போது இயக்குவார் என்று ஒரு பக்கம் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மற்றோரு பக்கம் ஜெயம் ரவி தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கமிட் ஆகி இருப்பதன் காரணமாக அவராலும் தனி ஒருவன் 2 படத்திற்கு சரியான கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், தனி ஒருவன் 2 படம் உருவாக இன்னும் நாட்கள் ஆகும் என்பதால் மோகன் ராஜா தன்னுடைய அடுத்த படங்களில் வேளைகளில் தொடங்கும் ஆர்வத்தில் இறங்கி இருக்கிறாராம். அடுத்ததாக மோகன் ராஜாவுக்கு இரண்டு பெரிய படங்களை செய்வதற்கான பெரிய வாய்ப்புகள் வந்து இருக்கிறதாம். அதில் முதல் படமாக இயக்குவதற்கு சிரஞ்சீவியை யவை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறதாம்.

மோகன் ராஜா சிரஞ்சீவியை வைத்து இயக்கும் படத்தினை சிரஞ்சீவி மகள் தான் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவும் இருக்கிறாராம். படத்தின்  கதையை பிவிஎஸ் ரவி எழுதியுள்ளார்.  படத்தை மோகன்ராஜா இயக்குகிறார். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் தற்போது துவங்கி ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாம்.

இதெல்லாம் மிஞ்சும் அளவிற்கு ஒரு தகவலும் கிடைத்து இருக்கிறது. அது என்னவென்றால், சிரஞ்சீவி படத்தை தொடர்ந்து மோகன் ராஜா  அஜித்தை  வைத்து இயக்கவும் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறாராம். சமீபத்தில் நடிகர் அஜித் இயக்குனர் மோகன் ராஜாவை நேரில் அழைத்து தனக்கு எதாவது கதை இருக்கிறதா? என்று கேட்டாராம். அதற்கு ஒரு கதையை மோகன் ராஜாவும் கூறினாராம்.

அவர் கூறிய கதை அஜித்திற்கு ரொம்பவே பிடித்துப்போக உடனடியாக படம் செய்யலாம் என்று அஜித் கூறிவிட்டாராம். எனவே, அஜித்தின் 64-வது திரைப்படத்தினை மோகன் ராஜா இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தனி ஒருவன் 2 போனால் போகிறது என்று இந்த இரண்டு படங்களிலும் மோகன் ராஜா கமிட் ஆகி இருப்பதாகவும் இந்த தகவலை வலைப்பேச்சு சேனல் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த சமயத்தில் அவருடைய 64-வது படத்திற்கான அப்டேட் தகவல்களாக வெளியாகியுள்ளது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்