விஜய்,அஜித் ,விக்ரம், சூர்யா படம் ட்ராப்! கோடிகணக்கில் நஷ்டம் ?பல ஷூட்டிங் ரத்து….
நேற்று முதல் 40 படங்களின் ஷூட்டிங் தமிழ் திரையுலகினர் துவக்கியுள்ள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, நிறுத்தப்பட்டுள்ளது. வௌியூர்களில் தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் ரூ.400 கோடி முடங்கியுள்ளது. தியேட்டர்களில் டிஜிட்டலில் படங்களை திரையிட கியூப் நிறுவனம் அதிகளவில் பணம் வசூலிப்பதை கண்டித்து கடந்த மார்ச் 1 முதல் புது படங்கள் ரிலீஸ் நிறுத்தப்பட்டது. இன்று மூன்றாவது வாரமாக எந்த புதிய தமிழ் படமும் வெளியாகவில்லை. இதுவரை 20 படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 100 கோடி வரை முடங்கியுள்ளது.
இந்நிலையில், 16ம் தேதி (நேற்று) முதல் சினிமா படப்பிடிப்புகள், எடிட்டிங், பாடல் பதிவு, டப்பிங் உள்பட பிற சினிமா பணிகள் எதுவும் நடைபெறாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. வெளிநாடுகளில் நடைபெற்று வரும் படப்பிடிப்புகள் வரும் 23ம் தேதி முதல் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அறிவித்தது.
நேற்று முதல் தமிழகம், வெளியூர்களில் ஷூட்டிங் நடந்து வரும் விஜய்,அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட ஹீரோக்களின் படங்கள் உள்பட 40 படங்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வௌிநாட்டு ஷூட்டிங்கும் நிறுத்தப்படுகிறது. இதனால் ரூ.300 கோடி வரை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னை தவிர மற்ற ஊர்களில் தியேட்டர்களை மூடவும் தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளனர். புதிய படங்கள் ரிலீஸ் நிறுத்தப்பட்டு 16 நாட்கள் ஆகியும் இதுவரை இப்பிரச்னையில் அரசு தலையிடவில்லை. நேற்று முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத சூழல் உருவாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.