#8YearsOfVedalam : அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்! குவிந்த வசூல் மழை…மறக்க முடியுமா வேதாளம்?

Vedalam

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘வேதாளம்’. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார், லட்சுமிமேனன், டெல்லி கணேஷ், சூரி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதிலும் அவர் வேதாளம் கதாபாத்திரத்தில் ரௌடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லவேண்டும். இந்த படம் அந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தான் வெளியாகி இருந்தது.

அந்த சமயம் எல்லாம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. சில இடங்களில் தண்ணீர் தேங்கியும், சில இடங்களில் வெள்ளமும் கூட வந்தது. கனமழை பெய்து கொண்டிருந்த நாட்களிலும் கூட படத்தை பார்க்க மக்கள் திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக சென்றுகொண்டிருந்தார்கள்.

பிசாசு 2 படத்தை பார்த்து மிரண்டு போன இயக்குனர் வெற்றிமாறன்! மிஷ்கின் செய்த சம்பவம் அப்படி?

மழையில் நினைந்த படியே படத்தை நின்று கொண்டும் பார்த்து ரசித்தார்கள். இந்த படத்திற்கு முன்பு அஜித்திற்கு என்னை அறிந்தால் படம் வெளியாகி இருந்தது.  இந்த படம் பெரிய அளவுக்கு போகவில்லை ஆனால், வேதாளம் படம் அஜித்திற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து வசூலில் தமிழ் சினிமையே திரும்பி பார்க்க வைத்தது.

குறிப்பாக படம் தமிழகத்தில் 60 கோடி வரை ஷேர் கொடுத்தது. இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8-ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் #8YearsOfBBVedalam என்ற டேக் கிரியேட் செய்து அதில் படம் தொடர்பான காட்சிகளை பதிவிட்டு அதுவரை வேற எந்த படமும் செய்ய வசூல் சாதனை செய்து, மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் வேதாளம்” என நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

இந்த திரைப்படம் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம்  உலகம் முழுவதும் 120 கோடி வசூல் செய்தது. தமிழ் இந்த படம் பெரிய வெற்றியை பதிவு செய்த நிலையில், தெலுங்கில் போலா சங்கர் என்ற பெயரில் இந்த ஆண்டு வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்