காதல் மனைவி மடியில் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் அஜித்.! வைரல் புகைப்படம் இதோ….
நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவரும் கடந்த 2000-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். திரைத்துறையில் ரசிகர்களுக்கு பிடித்த பேவரைட் ஜோடியாக இவர்கள் இருவரும் இருந்து வருகிறார்கள்.
இவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு காதலித்து வந்த சமயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று.
#Throwback : அஜித் ஷாலினி எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்.!#Ajithkumar???? | #Shaliniajithkumar | #ThunivuPongalWinner pic.twitter.com/u9N6CJdtSx
— CineBloopers (@CineBloopers) January 14, 2023
அந்த வகையில், தற்போது அஜித்- ஷாலினி எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் அஜித் தனது மனைவி ஷாலினியின் மடியில் அமர்ந்து இருக்கிறார். அஜித்தை ஷாலினி இறுக்கமாக கட்டி பிடித்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலில் உலகம் முழுவதும் 80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.