நடிகர் அஜித்தை காண திரண்ட ரசிக பட்டாளம்…போலீசார் தடியடி…!!!
நடிகர் அஜித் ஜெர்மன் நாட்டில் இருந்து சென்னை திரும்பியதை அடுத்து அவரைக் காண ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.
விஸ்வாச படத்தினை முடித்து தற்போது ஓய்வில் இருந்து வரும் சமீபத்தில் தக்ஷா குழு தொடர்பாக ஜெர்மன் சென்றார்.இந்நிலையில் இன்று ஜெர்மன் நாட்டிலில் இருந்து நடிகர் அஜித் சென்னை திரும்பிய போது அவரைக் காண ரசிகர்கள் திரண்டனர். அங்கிருந்த ரசிகர்கள் ம்ற்றும் விமான பயணிகளை வரவேற்க வந்தவர்கள் நடிகர் அஜித்தை கண்டு ஒன்றாக திரண்டதால் நடிகர் அஜித் தன்னுடைய காரில் ஏற முடியாமல் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார்.
விமான நிலையத்துற்குள் சென்ற அஜித்துடன் அவருடைய ரசிகர்களும் விமான நிலையத்திற்குள் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதனை அடுத்து அவர்களை மத்திய தொழிற்படை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.இதன் பின்னர் சென்னை விமான நிலையத்தின் மற்றொரு பகுதியில் அஜித் வெளியே வந்தார். அப்போது இதனை கண்ட ரசிகர்கள் தடுப்பு வேலிகளை தாண்டி குதித்து முண்டியடித்து சென்றனர். இதனால் போலீசார் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.இதனிடையே வெளியில் வந்த நடிகர் அஜித்தை போலீசார் காரில் எற்றி அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
https://twitter.com/ThalaAjith_FC/status/1068598934598078466