நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவர்களது படங்கள் வெளியானால் வசூல் ரீதியாக, பல சாதனைகளை படைத்துவிடும். அந்த அளவிற்கு இவர்களுக்கு மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.
இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் நண்பர்கள் என்றாலும் கூட, சினிமாவில் இருவருக்கும் போட்டி இருக்கும். ஆம், இவர்களது படங்கள் வெளியானால் யாருடைய படம் அதிகம் வசூல் செய்யும், யார் மாஸ் என்ற பெரிய எதிர்பார்ப்பே எழுந்துவிடும். அந்த வகையில், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படமும், துணிவு திரைப்படமும் வெளியாகிறது.
மேலும், இப்படி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இவர்கள் இருவரும் ஒரு படத்தில் நடிப்பதற்கு பல கோடிகள் சம்பளம் வாங்குவது என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். இதில் யார் தற்போது அதிகமாக வாங்குகிறார் என்ற கிசு கிசு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்களேன்- வசூலில் சருகிய விஷாலின் ‘லத்தி ‘…! இதுவரை எத்தனை கோடிகள் தெரியுமா..?
அதன்படி, நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் நடித்ததற்காக சம்பளமாக 100லிருந்து 120 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக சினிமா வட்டாரத்தில் சொல்கிறார்கள். இவரை போல, நடிகர் அஜித் துணிவு படத்துக்காக 70 கோடி மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளாராம். இதன் மூலம், அஜித்தை விட விஜய் தான் அதிக சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…