Categories: சினிமா

முதல் நாள் முதலிடத்தில் அஜித்.! பொன்னியின் செல்வனுக்கு எந்த இடம் தெரியுமா.?!

Published by
பால முருகன்

இந்தாண்டு  பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களும், பல சிறிய பட்ஜெட் திரைப்படங்களும் வெளியானது. இதில் சில படங்கள் வெற்றிபெற்றது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சில சாதனைகளை படைத்தது என்றே கூறலாம்.

விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்”, அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து வெளியான கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், டான், திருச்சிற்றம்பலம், வெந்து தணிந்தது காடு தற்போது வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பொன்னியின் செல்வன் படத்திற்கும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் இதுவரை 200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வருடம் (2022)-ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் பற்றிய விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் வழக்கமாக முதல் இடத்தில் இருக்கும் விஜய் படம் இரண்டாவது இடத்தில உள்ளது. முதலிடத்தில் வலிமை திரைப்படம் உள்ளது. விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளி பொன்னியின் செல்வன் 4-வது இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் :

  1. வலிமை – 36.17 கோடி
  2. பீஸ்ட் -27.40 கோடி
  3. பொன்னியின் செல்வன் – 27 கோடி
  4. விக்ரம் – 20.61 கோடி
  5. எதற்கும் துணிந்தவன் –  15.21 கோடி
  6. ஆர்ஆர்ஆர் 12.73 கோடி –
  7. திருச்சிற்றம்பலம் – 9.52 கோடி
  8. டான் – 9.47 கோடி
  9. கோப்ரா-9.28 கோடி
  10. கேஜிஎஃப் 2 – 8.24 கோடி

Published by
பால முருகன்

Recent Posts

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!

மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…

19 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : ரோஹித் தலைமையில் இந்திய அணி…பிசிசிஐ அறிவிப்பு!

மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி  கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…

32 minutes ago

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு : சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…

48 minutes ago

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ‘இவர்’ தான்! அடித்து கூறும் நெட்டிசன்கள்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…

58 minutes ago

களைகட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! களத்திற்கு தயாரான திமுக vs நாதக!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனுக்கள்…

1 hour ago

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு? த.வெ.க பொருளாளர் சொல்வேதென்ன?

காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…

2 hours ago