முதல் நாள் முதலிடத்தில் அஜித்.! பொன்னியின் செல்வனுக்கு எந்த இடம் தெரியுமா.?!
இந்தாண்டு பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களும், பல சிறிய பட்ஜெட் திரைப்படங்களும் வெளியானது. இதில் சில படங்கள் வெற்றிபெற்றது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சில சாதனைகளை படைத்தது என்றே கூறலாம்.
விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்”, அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து வெளியான கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், டான், திருச்சிற்றம்பலம், வெந்து தணிந்தது காடு தற்போது வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பொன்னியின் செல்வன் படத்திற்கும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் இதுவரை 200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வருடம் (2022)-ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் பற்றிய விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் வழக்கமாக முதல் இடத்தில் இருக்கும் விஜய் படம் இரண்டாவது இடத்தில உள்ளது. முதலிடத்தில் வலிமை திரைப்படம் உள்ளது. விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளி பொன்னியின் செல்வன் 4-வது இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் :
- வலிமை – 36.17 கோடி
- பீஸ்ட் -27.40 கோடி
- பொன்னியின் செல்வன் – 27 கோடி
- விக்ரம் – 20.61 கோடி
- எதற்கும் துணிந்தவன் – 15.21 கோடி
- ஆர்ஆர்ஆர் 12.73 கோடி –
- திருச்சிற்றம்பலம் – 9.52 கோடி
- டான் – 9.47 கோடி
- கோப்ரா-9.28 கோடி
- கேஜிஎஃப் 2 – 8.24 கோடி