தல அஜித் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி எனும் மெகா ஹிட் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
தல அஜித் இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் வாலி. இந்த திரைப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார். இதுதான் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாக்கு முதல் திரைபடம். இந்த படத்தில் அண்ணன் – தம்பி என இரட்டை வேடத்தில் அஜித் நடித்து இருப்பர். அதிலும், வாய் பேசமுடியாத மாற்று திறனாளியாகி கண்களாலேயே வில்லத்தனத்தை காட்டி மிரட்டியிருப்பார் நம்ம தல அஜித்.
இவரது இந்த மெகா ஹிட் திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாம். அதற்கு அங்குள்ள முன்னணி இளம் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அநேகமாக இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது. என்னதான் ரீமேக் செய்தாலும் எஸ்.ஜே.சூர்யா – அஜித் செய்து காட்டிய அந்த மேஜிக்கை திரும்ப நிகழ்த்துவது கடினமே.
அஜித் நடிப்பில் அடுத்ததாக வரும் பொங்கல் தினத்திற்கு வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…