தல அஜித்திற்கு மங்காத்தா எனும் மாஸ் கம்பேக் ஹிட் கொடுத்த அதே இயக்குனர் வெங்கட் பிரபு, தற்போது சிம்புக்கு மாநாடு எனும் மாஸ் ஹிட் படத்தை இயக்கியுள்ளார். இது உண்மையில், இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் கம்பேக் தான்.
ஒவ்வொரு நடிகருக்கும், ஏன் உச்ச நட்சத்திரத்திற்கும் கூட அவர்களது படங்கள் சரியாக போகாது, அல்லது ஒரு பெரிய ஹிட்டுக்காக காத்துகொண்டு இருப்பார்கள் அந்த படங்கள் எப்போதாவது அமையும். அது பெரும்பாலும், தங்களது வழக்கமான பார்முலாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க இயக்குனர் படமாக இருக்கும்போது கண்டிப்பாக அந்தப்படம் அப்படி அமையும்.
அப்படிதான் தல அஜித்திற்கு மங்காத்தா, தளபதி விஜய்க்கு துப்பாக்கி அப்படி ஒரு பிரமாண்ட வெற்றியை பெற்றது. தற்போது வரையில் அவர்களது படங்கள் மேற்கண்ட படங்களோடு ஒப்பிட்டு அந்த படம் அளவுக்கு இருக்குமா என ரசிகர்களை சிலாகிக்க வைக்கும்.
அப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிக்காக நீண்ட வருடங்கள் சிலம்பரசன் காத்துக்கிடந்தார் என்றே சொல்லலாம். அதிலும், இந்த காம்பேக் சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சினிமா ரசிகர்களும் கொண்டாடும் அளவிற்கு சிம்புவுக்கு மாஸ் ஹிட்டாக அமைந்துவிட்டது.
தல அஜித்திற்கு மாஸ் ஹிட்டாக மங்காத்தா படத்தை கொடுத்த அதே கம்பேக் கமர்சியல் கிங் வெங்கட் பிரபு தான், இந்த மாநாடு படத்தையும் இயக்கி இருக்கிறார். சொல்லப்போனால், இது இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் கம்பேக்தான். மங்காத்தாவுக்கு பிறகு சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களோடு கைகோர்த்தாலும், மங்காத்தா அளவுக்கு மாஸ் ஹிட் தற்போதுதான் கிடைத்துள்ளது என்றே கூறலாம்.
டைம் லூப் எனும் புது மையக்கரு, திரைக்கதையில் சுவாரஸ்யம், எடிட்டிங் , பின்னணி இசை என அனைத்தும் பக்காவாக அமைந்து மாநாடு திரைப்படத்தை பிளாக் பஸ்டர் திரைப்படமாக மாற்றியுள்ளது என்றே கூறலாம்.
முதல் நாள் வசூல் மட்டுமே 7 கோடியை கடந்துள்ளது என கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது பல இடங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது அப்படி இருந்தும், அதன் வசூல் குறையவில்லை என பல இடங்களில் கூறப்பட்டு வருகிறது. கண்டிப்பாக சிம்புவின் திரைவாழ்வில் இந்த மாநாடு பிரமாண்ட வெற்றியை பதிவு செய்ய போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…
சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…