அஜித் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் வலிமை தான் அதிக நீளம் கொண்ட திரைப்படமாம். இப்படம் 2 மணிநேரம் 59 நிமிடம் ஓடுகிறதாம்.
அஜித்குமார் ரசிகர்களுக்கு தங்கள் 2 வருட காத்திருப்பிற்கு பலனாக வரும் ஜனவரி 13ஆம் தேதி வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனை திருவிழாவாக மாற்ற ரசிகர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வலிமை படத்தின் ட்ரைலர் வெளியானது.
தற்போது இந்த படத்தின் சென்சார் செய்யப்பட்ட பின் வலிமையின் நீளமும், அதன் சான்றிதழும் வெளியாகியுள்ளது. இப்படம் 2 மணிநேரம் 59 நிமிடம் ஓடுகிறதாம். கிட்டத்தட்ட முழுதாக 3 மணிநேரம். படத்திற்கு சிறியவர்கள் பெரியவர்களின் துணையுடன் வந்து பார்க்கும் படி யு/ஏ சான்று கிடைத்துள்ளது.
இதுவரை அஜித் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் வலிமை தான் அதிக நீளம் கொண்ட திரைப்படமாம். அதற்கு அடுத்தபடியாக ரெட் திரைப்படம் 2 மணிநேரம் 55 நிமிடமும், ஆஞ்சநேயா திரைப்படம் 2 மணி நேரம் 54 நிமிடமும், சிட்டிசன் திரைப்படம் 2 மணி நேரம் 52 நிமிடமும் ஓடியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…