அஜித்துக்கு ஷாலினி கொடுத்த பிறந்தநாள் கிஃப்ட்! என்ன தெரியுமா?

Shalini gifted AjithKumar

Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருடைய ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்ளின் மூலம் தெரிவித்து வருகிறார்கள். அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய பெயர் தான் எல்லா பக்கமும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இதனையடுத்து, நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளதாக தெரிகிறது. பிறந்த நாள் அன்று அஜித்திற்கு மிகவும் பிடித்த விஷயத்தை ஷாலினி பரிசாகவும் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அஜித்திற்கு நடிப்பதை தாண்டி பைக்கில் ரைடு போவது ரொம்பவே பிடித்த விஷயம்.

பைக் என்றாலே அஜித் ஒரு குழந்தை போல மாறிவிடுவார் என பல பிரபலங்கள் கூறி நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். அதைபோலவே அஜித் பைக் ரைடு செல்லும்போதும் கூட நாம் அதனை பார்த்து இருக்கிறோம். இந்நிலையில், அஜித்தின் பிறந்த நாளில் அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் அளிக்கும் விதமாக ஷாலினி டுகாட்டி மாடல் பைக் ஒன்றை கொடுத்துள்ளார்.

அஜித்திற்கு ஷாலினி கொடுத்துள்ள அந்த பைக் DUCATI MULTISTRADA V4. இதை பைக் விலை இந்தியாவில் கிட்டத்தட்ட 23 லட்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அஜித்திற்கு அவர் கிப்ட் -ஆக கொடுத்துள்ள அந்த பைக்கின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ShaliniAjithKumar gifted a Dukati bike to AK on his birthday special
ShaliniAjithKumar gifted a Dukati bike to AK on his birthday special [file image]

நடிகர் அஜித்குமார் முன்னணி நடிகராக வளர்த்துக்கொண்டு இருந்த சமயத்திலே ஷாலினியை காதலித்தார். குறிப்பாக அமர்க்களம் படத்தில் இருவரும் இணைந்து ஒன்றாக நடித்து இருந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர கடந்த 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அனுஷ்கா குமார் என்ற மகளும், ஆத்விக் அஜித் என்ற மகனும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
TVK Vijay - BJP Senior Leader H Raja
tvk vijay
Union minister Piyush goyal say about StartUps
Vijay gets Y category security
Indian Astronaut Shubhanshu Shukla
BJP State President K Annamalai