ஒரு வழியாக விடாமுயற்சியை கையில் எடுத்த அஜித்!! குந்தவையுடன் வெளிநாடு பறந்த வைரல் புகைப்படங்கள்…

Ajithkumar Chennai Airport

நடிகர் அஜித் கடைசியாக ‘ததுணிவு’ படத்தில் நடித்திருந்தார். தற்போது, அவர் தனது அடுத்த பட தலைப்பான ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக நாளை தொடங்கவுள்ளது.

விடாமுயற்சி திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் கடந்தும் படபிடிப்பு ஆரம்பிக்காமல் இருந்து வந்தது. அதற்கு ஒரு காரணம் நடிகர் அஜித் என்றே சொல்லலாம். அது என்னவென்றால், அஜித் தனது உலக பைக் சுற்றுப்பயணத்தை கையில் எடுத்துக்கொண்டு வெளிநாடுகளில் பைக் ரைட் செய்துவந்தார்.

அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில், எப்போடா? இதன் படப்பிடிப்பு தொடங்கும் என தவமாய் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இன்று ஒரு குட் நியூஸ் கிடைத்திருக்கிறது.

அதாவது, ஒரு வழியாக நடிப்பதற்கு முடிவு செய்து பைக் பயணத்தை ஒத்திவைத்து கொண்டு, ஒரு வழியாக ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை தொடங்க அஜித் அஜர்பைஜான் நாட்டிற்கு  செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அடுத்த 3 மாதங்கள் இடைவிடாது படப்பிடிப்பை நடத்த படக்குழு குழு திட்டமிட்டுள்ளது. இதெல்லாம் சரியாக நடந்தால, படம் 2024 கோடை விடுமுறையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ajithkumar
Ajithkumar [file image]

அங்கு செல்வதற்காக இன்று அதிகாலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தார் அஜித் குமார். அவருடன் இயக்குனர் இருந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, நடிகை திரிஷாவும் உடன் சென்றதாக தெரிகிறது.

Ajithkumar -Trisha
Ajithkumar -Trisha [file image]

இவர்கள் இருவரும் ஒன்றாக துபாய் விமான நிலையத்தில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. அது உண்மை என்று தெளிவுபடுத்தும் வகையில், துபாய் விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் அஜித்-திரிஷாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், திரிஷா துபாய் விமான நிலையத்தில் நிற்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் யார் என்பது குறித்து தகவலை படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்