சினிமா

விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் அஜித் குமார்! அடுத்த ஆண்டு சரவெடி தான்…

Published by
பால முருகன்

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த திரைப்படத்தை   லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு மட்டும் தொடங்காமல் இருந்து கொண்டிருந்தது நிலையில், படத்தின் படப்பிடிப்பு எப்போதுதான் தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் அவளோட காத்திருந்த நிலையில் படத்திற்கான  படப்பிடிப்பு அக்டோபர் 2-ஆம்  தேதி பூஜை உடன் துபாயில் தொடங்கியது இந்த நிலையில் படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறாராம். ஒரு அஜித் வயதான கதாபாத்திரத்திலும், ஒரு அஜித் இளமையான கதாபாத்திரம் என இரண்டு கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறாராம். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், படத்தில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளாராம்.

அவர் வேறு யாரும் இல்லை கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், திரு. சந்திரமௌலி, கசட தாபரா உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ரெஜினா தான் நடிக்கவிருக்கிறார். படத்தில் இளமையான கதாபாத்திரத்தில் நடிக்கும் அஜித்திற்கு ஜோடியாக ரெஜினா  நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தில் கவர்ச்சியான காட்சிகள் இருப்பதன் காரணமாக அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இதைப்போலவே வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திலும் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் தான் நடிக்கிறார். விடாமுயற்சி திரைப்படமும், தளபதி 68 திரைப்படமும் ஒரே சமயத்தில் தான் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இரண்டு திரைப்படமும் அடுத்த ஆண்டு ஒரே தினத்தில் வெளியானால் கூட அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்னும் இல்லை. ஏனென்றால், இரண்டு படமும் அடுத்த ஆண்டு நல்ல நாளில் தான் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.  ஏற்கனவே, அஜித் விஜய் நடித்த துணிவு வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

1 hour ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

1 hour ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

2 hours ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

3 hours ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

3 hours ago

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

14 hours ago