ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

துபாய் கார் ரேஸில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்திய அனைவருக்கு நன்றி தெரிவித்து நடிகர் அஜித்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Ajith Kumar

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இவருக்கு இவரது ரசிகர்கள் மட்டும்மல்லாமல், திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், துபாய் கார் ரேஸில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்திய ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் நடிகர் அஜித், நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல், பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளர்.

இது தொடர்பாக அவரது மேலாளர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

எல்லாம் வல்ல இறைவன் எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.  இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது.

என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல, உங்களைப் பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன்.  அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்…நன்றி..!” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்