மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் பில்லா!
படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வருவது சமீபகாலங்களில் மிகவும் வழக்கமாகிவிட்டது என்றே கூறலாம். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர் தினத்தை முன்னிட்டு கூட வாரணம் ஆயிரம், பிரேமம், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் எல்லாம் ரீ-ரிலீஸ் ஆனது. அந்த படங்களை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் ஆகவும் இருக்கிறது.
அந்த வகையில் அஜித்குமார் ரசிகர்கள் உற்சாகம் பெறும் வகையில் அவர் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன பில்லா திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. விஸ்ணு வரதன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.
அடேங்கப்பா! ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நமீதா,பிரபு,ரஹ்மான்,ஆதித்யா மேனன், சந்தானம், பிரேம்ஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படம் அஜித்குமாரின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
படம் வசூல் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படம் பலமுறை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதுள்ளது. ரீ -ரிலீஸ் செய்யப்பட்ட பலமுறையும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதனையடுத்து, படம் மீண்டும் நீண்ட மாதங்களுக்கு பிறகு வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி தமிழகத்தில் மீண்டும் ரீ -ரிலீஸ் ஆகவுள்ளது. படம் ரீ -ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக படத்தை கொண்டாட காத்திருக்கிறார்கள்.