மகள் – மனைவியுடன் கியூட் உரையாடல்… மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!

கார் ரெஸ் வெற்றியில் மூழ்கிய அஜித் தனது மகிழ்ச்சியான தருணத்தை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடினார்.

Ajith Team 3rd place with Dubai

துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும் அஜீத் தனது குடும்பத்தினர் மற்றும் அணியினருடன் கொண்டாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் நிரம்பியுள்ளது.

துபாய் 24H கார் ரேஸிங் தொடரில் 992 போர்ஷே பிரிவில் 3வது இடத்தைப் பிடித்து அஜித் அணி அசத்தியது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் ரேஸில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது அணி சிறப்பாக செயல்பட்டு 3வது இடத்திற்கு முன்னேறியது. இதனையடுத்து, அஜித் தனது அணியினரை கட்டியணைத்து, குதித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக, வெற்றியில் உணர்ச்சிவசப்பட்ட அஜித், தனது வெற்றியின் மகிழ்ச்சியான தருணத்தை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடினார். மேடையில் தனது வெற்றி கோப்பையை மகன் ஆத்விக் உடன் வெற்றியை பகிர்ந்து கொண்டாடினார்.


அது மட்டும் இல்லாமல், தனது மனைவியிடம் முத்தத்தை பகிர்ந்து கொண்டார், வெற்றியை போற்றும் வகையில், அஜித்துக்கு அன்பு முத்தத்தை வழங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இதனையடுத்து, இப்போட்டியை காண சென்ற நடிகர் மாதவன், அஜித்திற்கு நேரில் வாழ்த்து கூறினார்.

இதன்பின், வெற்றிக்களிப்பில் இருந்த அஜித், கையில் தேசியக்கொடியை பிடித்துக்கொண்டு மைதானத்திற்கு ஓடி வந்தார். அங்கிருந்த ரசிகர்கள் அவருக்கு முத்தமழை பொழிய, அஜித்தும் முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

ரேஸுக்கு மத்தியில் அஜித் தனது மகளுடன் ரேஸ் உடையிலேயே அமர்ந்து உரையாடிய காட்சிகள் கியூட்டாக உள்ளது. தலயை எப்போதாவது வெளியில் பார்ப்போமா என காத்திருந்த ரசிகர்களுக்கு அவரை தொடர்ந்து பார்த்து வருவது குதூகலத்தை அளித்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்