மைதானத்தில் மகன் ஆத்விக்குடன் அஜித்குமார் – ஷாலினி தம்பதி! வைரல் க்ளிக்ஸ் இதோ…

Ajith Kumar latest clicks

நடிகர் அஜித்குமாரின் குடும்பம் எங்கேயாவது சுற்றுலா சென்றாலோ அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டலோ அவர்களுடைய புகைப்படங்கள் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும்.

அந்த வகையில், தற்பொழுது அவரது மகன் ஆத்விக் உடன் அஜித்தின் குடும்பம் கால்பந்து மைதானத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் – ஷாலினியின் மகன் ஆத்விக் தனது சிறு வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், அவர் எதிர்காலத்தில் சாம்பியனாக வருவார் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீப நாட்களாகவே, ஆத்விக் மைதானத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சமீபத்தில், கால்பந்து விளையாட்டு போட்டியில் கோல்ட் மெடலை வென்ற புகைப்படங்கள் வெளியானது.

சில தினங்களுக்கு முன், விடாமுயற்சி படப்பிடிப்பை அஜர்பைஜான் நாட்டில் முடித்துக்கொண்டு சிறிய இடைவெளிக்காக சென்னை திரும்பினார். இந்நிலையில், சென்னை திரும்பிய அஜித் மற்றும் ஷாலினி ஆகியோர் தங்களது மகன் ஆத்விக்-ன் கால்பந்து கிளப்பில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முடிந்தது ‘விடாமுயற்சி’ ஷூட்டிங்? திடீரென சென்னை திரும்பிய அஜித் குமார்! ஏன் தெரியுமா?

விடாமுயற்சி

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதற்கு அனிருத்தின் இசையமைக்க, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்