அஜித்தால் அலறிய வெங்கட் பிரபு! மங்காத்தா படப்பிடிப்பில் நடந்த சம்பவம்?

Mankatha : மங்காத்தா படப்பிப்பு சமயத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு அஜித் குமார் கார் ஓட்டிக்காட்டி பயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகர் அஜித்குமார் கார் மாற்றும் பைக் ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் காட்டுவது உண்டு என்பது பலருக்கும் தெரியும். படங்களில் வரும் பைக் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் கார் ஸ்டண்ட் காட்சிகளில் எல்லாம் பெரும்பாலும் டூப் போடாமல் அவரே நடிப்பார். குறிப்பாக வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மங்காத்தா படத்தில் கூட பைக் ஸ்டண்ட் காட்சியில் கூட அவர் தான் நடித்து இருப்பார்.
இந்த காட்சி எடுக்கப்படுவதற்கு முன்பு வெங்கட் பிரபுவை அலற வைக்கும் விதமாக அஜித்குமார் ஒரு விஷயம் ஒன்றை செய்தாராம். அதாவது முதன்முதலாக இந்த காட்சி எடுக்கப்படுவதற்கு முன்பு நான் ஒரு முறை வாகனத்தை ஓட்டி விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு ட்ரையல் அஜித்குமார் பார்த்தாராம்.
அதன் பிறகு கார் ஒன்றில் வெங்கட் பிரபுவை எற கூறினாராம். வெங்கட் பிரபு ஏரிய பிறகு எங்கு அண்ணா போறோம் என்று கேட்டாராம். அதற்கு அஜித் நாம எங்கையும் போகல என கூறி அந்த காரை அப்படியே கியர் போட்டு சுத்து சுத்து என்று ஒரே இடத்தில் இருந்து வட்டமாக சுற்றினாராம். இதனால் பதறிப்போன வெங்கட் பிரபு அண்ணா என்னை விட்டுருங்க அண்ணா என்பது போல கூறி அலறிவிட்டாராம்.
அதன் பிறகு அந்த ட்ரையல் பார்த்த பைக் ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் படமாக்கினார்களாம். அப்போது வைபவ் அஜித் பின்னாடி இருந்து பயத்தில் கத்தினாராம். காட்சி எடுக்கப்படும்போதே அஜித்துடைய வயிற்றை பிடித்து காயத்தை ஏற்படுத்தி விட்டாராம். இந்த தகவலை வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், மங்காத்தா திரைப்படம் அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025