ஒரு பக்கம் ‘விடாமுயற்சி’.. மறுபக்கம் கார் ரேஸ்.! கலக்கும் அஜித்குமார்.!

போர்ச்சுகலில் நடக்கும் கார் ரேஸ்க்கு தயாராகி வருகிறார் நடிகர் அஜித்துகுமார். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar Racing

சென்னை : ஒரு பக்கம் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகவிருக்கும் நிலையில், மறுபக்கம் கார் ரேஸுக்கு தயாராகி வருகிறார். அஜித் பந்தயத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அவரது இரண்டு படங்கள் தற்போது அடுத்தடுத்த வெளியாக காத்திருக்கிறது.

தற்பொழுது, அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம், இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடித்துள்ள படம் தற்போது ரிலீஸாக உள்ளதால், “கடவுளே அஜித்தே” என கோஷமிட ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

இதனிடையே, சமீபத்தில் நடந்து முடிந்த 24H துபாய் 2025 இன் 991 பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்த அஜித் குமார், அடுத்ததாக தெற்கு ஐரோப்பிய தொடர் 2025 போர்ஷே ஸ்பிரிண்ட் சவாலின் முதல் சுற்றுக்கான பயிற்சியை தொடங்கியுள்ளார். வரவிருக்கும் ‘தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025’ இல் பங்கேற்க அஜித் குமார் ஏற்கனவே போர்சுகலில் உள்ளார்.

அங்கு அவர் தனது பயற்சியாளரிடம் உரையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த போட்டி இரண்டு நாட்களுக்கு நடைபெறும், ஒவ்வொரு பந்தயமும் 6 மணி நேரம் நீடிக்கும். அதிகபட்சமாக 30 கார்கள் பந்தயத்திற்கு அனுமதிக்கப்படுவதால், இந்தத் தொடர் ஒரு கடுமையான போட்டியாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்