நாளை தொடங்கவிருக்கும் கார் ரேஸ்… சீறி பாய தயாராகும் அஜித் குமார்!

நாளை தொடங்கவிருக்கும் 24H Dubai கார் ரேஸுக்கு நடிகர் அஜித்குமார் தயாராகி வருகிறார்.

ajith kumar car race

துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில், ஜனவரி 10 ஆம் தேதி வெளிவரவிருந்த ‘விடாமுயற்சி’ படம், எதிர்பாராத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. புதிய வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது ஒரு பக்கம் இருக்க அவரது கார் ரெஸ் ரசிர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

அந்த வகையில், 2 நாட்கள் முன்பு அஜித் கார் ரேஸிங் பயிற்சியின் போது, மிகவும் பயங்கரமான விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் நடிகரின் கார் வெடித்து சிதறியது. எனினும் இந்த விபத்தில் நடிகர் பத்திரமாக உயிர் தப்பியதாக அஜித் கார் ரேஸிங் டீம் விளக்கம் கொடுத்தது.

நடிகரின் கார் விபத்து குறித்த வீடியோவை பல சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்துள்ளனர். விபத்துக்காட்சிகளை பார்த்தவர்கள் அய்யய்யோ ‘தல’க்கு என்ன ஆச்சு என பயந்து போனார்கள். ஆனால் அவருக்கு சிறிய கீறல் கூட விழவில்லை, நலமுடன் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

நாளை தொடங்கவிருக்கும் துபாய் 24H பந்தயத்தில் அஜித் குமார் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்கின்றனர் . இந்நிலையில், நாளை ரெஸ் தொடங்கவிருக்கும் நிலையில், நேற்று 2 கட்டமாக நடந்த தகுதிச் சுற்றிலும் அஜித் குமார் பங்கேற்று கார் ஓட்டியுள்ளார்.

மேலும், இன்று நடக்கவிருக்கும் நடக்கும் கார் அணிவகுப்பிலும் அஜித் குமார் பங்கேற்பார் என தகவல் வெளியானது. இன்று அவர் கலந்துகொள்ளவுள்ள துபாய் 24H ரேஸிங்கிற்காக வாகன சோதனைக்கு அஜித் வந்ததை அடுத்து, ரசிகர்கள் “My game is beyond pain” என குதூகலத்தில் திளைத்துள்ளார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்