சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய அஜித் குமார்! புது படத்திற்கு இத்தனை கோடிகளா?
நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கி வந்தார். துணிவு திரைப்படத்தில் நடித்ததற்காக 70 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்திற்காக 105 கோடி சம்பளம் வாங்கினார். இந்த நிலையில், இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு அஜித் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறார்.
அதன்படி, அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே, அவர் அஜித்தை சந்தித்து ஒரு கதையை கூற அந்த கதை அஜித்திற்கு மிகவும் பிடித்து போன காரணத்தால் அஜித் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் போதே அவர் அஜித் கிட்ட ஒரு கதை கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
எனவே, அந்த கதை தான் அஜித்தின் 63-வது திரைப்படமாக உருவாகலாம் என தெரிகிறது. அஜித் தற்போது விடா முயற்சி படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தை முடித்த பிறகு தனது 63-வது திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அனைவரையும் வியக்க வைக்கும் ஒரு தகவல் என்னவென்றால், அஜித் சம்பளம் தான்.
ஏனென்றால், இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்திற்கு சம்பளமாக 163 கோடி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு 150 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில்,தற்போது அஜித் சம்பளத்தை உயர்த்தி கேட்டிருக்கிறாராம்.
சம்பளத்தை உயர்த்தி கேட்டதும் படத்தை தயாரிக்கும் ஆர்எஸ்இன்ஃபோ டெயின்மென்ட் உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளதாம். எனவே, இந்த படத்திற்காக அஜித்திற்கு சம்பளமாக 163 கோடி கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கான தகவல் ஒரு பக்கம் பரவி வரும் நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பேட்டி ஒன்றில் ” இப்போது பரவும் தகவல் உண்மையாக இருந்தாலும் தற்போது படம் பேச்சுவார்தையில் தான் இருக்கிறது. முடிந்த பிறகு தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.