Ajith Kumar : தனக்கும் ரசிகர்கள் கூட்டம் வருமா என பிரபலத்திடம் அஜித்குமார் ஏங்கியுள்ளார்.
நடிகர் அஜித்குமாருக்கு இப்போது எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இருந்தாலும் அவர் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அஜித்குமார் தனக்கும் ரசிகர்கள் கூட்டம் வருவார்களா? என ஏங்கினாராம். அமராவதி பட சமயத்தில் தலைவாசல் விஜயிடம் தான் நானும் ஒரு பெரிய நடிகராக வேண்டும் எனக்கும் ரசிகர்கள் கூட்டம் வரவேண்டும் என் அஜித் கூறினாராம்.
தலைவாசல் விஜய் அந்த சமயம் தொடர்ச்சியாக சில படங்களில் நடித்து கொண்டு இருந்ததால் அவருடைய பெயர் நன்றாக வெளிய தெரிந்ததாம். ஆனால், அஜித் அப்போது தான் அமராவதி படத்தில் நடித்து முடித்து இருந்தார். எனவே, அஜித்தை அந்த சமயம் பலருக்கும் தெரியாதாம்.
அமராவதி படத்தில் நடித்து முடித்துவிட்டு படத்தை பார்க்க தலைவாசல் விஜயுடன் இணைந்து அஜித் அமராவதி படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றாராம். படத்தை பார்த்துவிட்டு வெளிய வந்தவுடன் தலைவாசல் விஜய் பார்த்து பலரும் நீங்க தானே தலைவாசல் படத்தில் நடித்தது என்று கேட்டு பேசினார்களாம். இதனை பார்த்த அஜித் நம்மளை யாருக்கும் தெரியவில்லை என்று வருத்தப்பட்டாராம்.
தலைவாசல் விஜையிடம் அவர்கள் எல்லாம் பேசிவிட்டு சென்ற பிறகு அஜித் எனக்கும் இந்த மாதிரி கூட்டம் வந்து பேசுவார்களா கண்டிப்பாக வரவேண்டும் என்று ஆசைபட்டாராம். உடனடியாக தலைவாசல் விஜய் கவலை படாதே நீ பெரிய ஹீரோவாக வருவாய் அதற்கான எல்லா தகுதியும் உன்னிடம் இருக்கிறது என்று கூறினாராம். இந்த தகவலை தலைவாசல் விஜயே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…