குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய அஜித் குமார்…வைரலாகும் புகைப்படங்கள்.!
நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில், தற்போது அஜித் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடியுள்ளார். அதற்கான புகைப்படங்களையும் நடிகை ஷாலினி தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
ஒரு புகைப்படத்தில் அஜித் தனது மகன் ஆத்விக் உடன் நடந்து வருகிறார். மற்றோரு புகைப்படத்தில் அஜித் தனது குடும்பத்துடன் இருக்கிறார். மற்றோரு புகைப்படத்தில் ஷாலினி தனது மகளுடன் இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படங்களை பார்த்த அவருடைய ரசிகர்கள் அஜித் சாரின் மகளும், மகனும் இவ்வளவு வளந்துட்டாங்களே எனவும், தமிழ் சினிமாவில் அழகான குடும்பம் அஜித் அண்ணாவின் குடும்பம் தான் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் , அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சில சாதனைகளை படைத்தது வருகிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.